Wednesday, 4 April 2012


உணர்வுகள் அடக்கம் செய்யப்பட்டு
விட்டன இதயத்தில் உறவுகளால்
ஆனா உன் மீது கொண்ட பாசம்
உன் புகைப்படம் பார்த்ததும்
முத்தம் இட தோன்றும் அந்த
நொடி உணர்த்தி செல்கிறதடா v.m.j.gowsi

என்னவன் மனதிலும்
மடிக்கணினியிலும் மட்டுமே
என்னால் இடம் பிடிக்க முடிந்தது
அவன் மடியில் இன்னும் என்னால்
இடம் பிடிக்க முடியில்லை ஆனா
எனக்கான இடம் {என்னவன் மடி }
எனக்காகவே காத்திருக்கின்றது
அக்கரை சீமையிலே v.m.j.gowsi

உன்னோடு நான் என்னோடு நீ
என்று தானே நேசித்தோம் விதி
பாதை மாற்றி சென்றது விதி
பாதை மாற்றினாலும் நம்
இதயம் இன்னும் இடம் மாறவில்லை

இந்த நிமிடம் வரை உன்னாலேதான்
என் இதயம் துடிக்கின்றது
உன் இதயமும் இந்த நிமிடம் வரை
உன்னை எனக்கு உசிராய் பிடிக்கும்
என்று சொல்லிவிட மறுக்கவில்லை

வாழ்க்கை திசை மாறியாது
தொலை தூரத்தில் இருந்து
நேசித்தாய் இறுதி வரை நான்
தொட முடியாத தூரம் சென்று
வாழ்கிறாய் என் இதயம் தொட்டு

ஒன்று மட்டும் சொல்லி விடுகிறேன்
காலம் நம்மை பிரித்தாலும்
தூரம் நம்மை தொலைத்தாலும்
அழியாத நம் நினைவோடு
உன்னுள் நான் ஒருத்தி என்னுள்
நீ ஒருவன் என்றே வாழ்ந்திடுவோம்

உன்னிடம் இருந்து வெறுப்பை
மட்டும் நான் சம்பாதிக்கவே
மாட்டேன் .......உன்னிடம்
வெறுப்பை சம்பாதிப்பதற்கு
நான் மரணத்தை விலை
கொடுத்து வாங்கிடலாம் v.m.j.gowsi —

வார்த்தையால் மனைவி என்றாய்
உறவிலே காதலனாய் இருந்து
கொண்டே உள்ளம் பூரித்தது
இன்று உள்ளம் துடிக்கின்றது
இறுதி வரை வார்த்தையிலேயே
உன் மனைவியாய் வாழ்ந்து
விட்டேனே என்று ....பரவாயில்லை
இறுதி வரை உறவில் காதலனாய்
இரு எடுக்கும் ஜென்மம் எல்லாம்
உனக்காக காத்திருப்பேனடா v.m.j.gowsi

என் மன்னவனே என்னிடம் இறுதி
வரை வராமல் போனாலும் உன்னிடம்
இருந்து வந்த உந்தன் தாயன்பு ஒன்று
எனக்கு போதுமடா என் தாயானவனே
என் கவியிலாவது நம் காதல் வாழ v.m.j.gowsi

மாத்திரையின் உதவியோடு
தூங்கியவள் இன்று உன்
அன்பின் உதவியோடு
தூங்குகிறேன் தாலாட்ட
உன் அன்பிருக்க மாத்திரை
எதற்கு v.m.j.gowsi

தூங்கிய நாட்கள் நினைவில்லை
தூங்காத நாட்கள் நினைவில் உண்டு
நீ பிரிந்த பின்பு என்னுள் உன்னால் வந்த
வலிகள் எப்படி என்னை தூங்க
வைக்கும் எங்கனம் மறப்பேனடா
என்னவனே உன் நினைவுகளை v.m.j.gowsi

நான் உனக்காக எழுதிய
கவிதைகள் ஆயிரம்
பிரம்மன் எனக்காக எழுதிய
ஒற்றை கவிதை நீயடா v.m.j.gowsi

கருவறையில் கருத்தரித்தாலும் கடைசி
வரை கல்லறையிலும் உன்னையே தேடும்
பாவி இவள் மனது என்னவனே v.m.j.gowsi

யாரோ ஒரு கவிஜனின் வரிகள்
என் காதில் விழுந்தது "முந்தானை
பார்த்து முந்நூறு கவிதை எந்நாளும்
எழுதும் கவிஜர்கள் கோடி"என்று
உன்னவள் நான் உன் பாசம்
பார்த்தே மூவாயிரம் கவிதைகள்
எழுதிவிட்டேன் v.m.j.gowsi

உறவுகள் உள் நோக்கோடு
என்னை பயன்படுத்தும்
பொழுதெல்லாம் நான்
வேதனை கொள்வதில்லை
என்னவனே நான் தான்
நிரந்தரமாய் வசிக்கிறேனே
போலி இல்லாத உன் இதயத்தில் v.m.j.gowsi

பலநேரம் காயபடுத்தி அழவைக்கும்
உனது செயல் சில நேரம் அன்பாய்
உன் கொஞ்சலால் வார்த்தையால்
வாழ வைப்பாய் ....பலநேரம்
காத்திருப்பேன் இந்த சில
நேரத்துக்காய் v.m.j.gowsi

பிரியும் போது பிரியாதே என்று
சொல்லிவிட தெரியலடா
இன்று நீ பிரியும் போது
என்னை விட்டு போகாதே என்று
கேட்டிருந்த உனக்காக வந்திருப்பேனே
என்று சொல்லும் போதெல்லாம்
மரண வலியை உணர்கிறேனடா
v.m.j.gowsi

உன்னிடம் நான் வந்தால் என்னிடம்
என்ன கேட்பாய் என்று கேட்கின்றாய்
ஒன்றே ஒன்றுதான் கேட்பேனடா
ஏன் என்னை தாயிருந்தும் தாயில்லா
பிள்ளை ஆக்கினாய் என்று ஆம்
என் தாயல்லவாட நீ .......v.m.j.gowsi

என் விழிகள் சோகமாய்
உணரும் போதெல்லாம்
உன்னிடம் தஞ்சமடையவே
துடிக்கிறேன் தொலைவில்
நீ இருந்தாலும் வாழ வைக்கும்
உன் அன்பான வார்த்தைக்குள் v.m.j.gowsi

உன்னை நேசித்து உன்னையே
பின் தொடரும் உன் நிழலிடம்
கூட சொல்லி வை உன்னை
உயிராய் சுவாசிக்க ஒருத்தி
இருக்கிறாள் என்று v.m.j.gowsi

மரணித்த பின் என் விழிகள்
மூடப்பட்டலும் என் விழிகளுக்குள்
உன் விம்பமே வேண்டும்
நெருப்பில் வெந்தாலும் உன்
புன்னகை நிறைந்த முகம்
என்னுள் நிறைந்தே இருக்க
வேண்டும் v.m.j.gowsi

என் வாழ்வில் தவற விட்ட
ஒரே ஒரு தருணத்தின்
தண்டனையாய் இன்னும்
இன்னும் விழிமேல் நீரோடு
நானும் இங்கே ஆம் என்னை
உன்னோடு அணைத்து விடு
என்று கூற வேண்டிய நானே
உறவுகளுக்காய் விலகிவிடு
என்று கூறிய அந்த தருணம்
வலிக்கிறது என்னுள் v.m.j.gowsi

தூரத்து நிலா வானம் மேகம்
எல்லாமே அழகுதான் அன்று
தூரத்து நிலவான உன்னை
தொலைவில் இருந்து நேசித்த போது,,,
இன்று அவை அனைத்தும் எனக்கு
வேதனையை கொடுக்கின்றது
அருகில் சென்று ரசிக்க முடியவில்லையே
உன்னை போலவே v.m.j.gowsi

உனக்கான என் கவிதை
நீண்டு கொண்டே போகிறது
மன்னித்து விடு என் காதலை
என்னால் அளவிட முடியவில்லை v.m.j.gowshi

என்னால் உன் அன்பில் உணர முடிகின்றது
நீ என் காதலன் என்று அல்ல நீ என் நண்பன்
என்று அல்ல நீ என் கணவன் என்று அல்ல
நீயே என் தாயானவன் என்று v.m.j.gowsi